"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என நம் முன்னோர்கள் கூறிருக்கிறார்களே, ஏன் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்? என்று என் அப்பாவிடம் கேட்டேன்.
"அந்தக்காலத்தில் வானுயர கட்டிடங்களோ அல்லது தொலைத்தொடர்பு கோபுரங்களோ இல்லை. எனவே மாரி காலங்களில் இடிமின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும் பொழுது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே கோவிலின் கோபுர உச்சிகளில் கூரான கலசங்களை வைத்தனர். இடிமின்னல் தாக்கம் ஏற்படும் பொழுது, அது கோபுர கலசம் ஊடாக பூமியை சென்றடையும். மக்களைத்தாக்காது. இதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது. மேலும் தற்பொழுது கூட எந்த மதமாக இருந்தாலும் அவர்களுடைய ஆலயத்தின் உச்சிப்பகுதி கூராக இருப்பதனை அவதானிக்க முடியும்" என்றார். மேலும் இவ்வாறு தொடர்ந்து தாக்கப்படும் கலசம் கும்பாவிஷேக தினத்தில் அமிலத்தன்மையுள்ள பழம் , நெய் போன்றவற்றினால் சுத்தம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment