உண்மையான கருத்து முற்றிலும் வேறுபாடானது. அதாவது முற்காலத்தில் போரானது தர்ம விதிமுறைகளுக்கமையவே நடைபெற்றது. எனவே போரில் வென்ற படைப்பிர்வு ஊருக்குள் நுழையும்பொழுது பெண்கள், குழந்தைகள், மற்றும் வலுவற்றவர்கள் உள்ள பகுதிகளுக்குள் செல்லவோ போரிடவோ கூடாது. எனவே அவ்வாறானவர்கள் இருப்பதை தெரிவிப்பதற்காக வீரர்கள் வரும்பொழுது வீட்டில் வளர்க்கும் பூனையை தூக்கி குறுக்கே ஓட விடுவார்கள். படைவீரர்களும் அதனை புரிந்துகொண்டு திரும்பிச்சென்று விடுவார்கள். இதுவே நாளடைவில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என திரிபடைந்துள்ளது.
Monday, 19 July 2021
மதம்
நீ ஓர் குறிப்பிட்ட இடத்தினை அடைவதற்கு புறக்காரணிகளின் தன்மைக்கு ஏற்ப வாகனங்களை பயன்படுத்த வேண்டும். உதராணமாக நீ செல்லவேண்டிய இடம் ஓர் தீவாக இருப்பின் நிச்சயமாக ஓர் படகையோ விமானத்தையோ பயன்படுத்த வேண்டும். அதேபோன்று தரையில் கூடிய தூரத்தில் உள்ள இடமாயின் வேகமாக அல்லது நீண்டதூரம் பயணிக்கக்கூடிய வாகனத்தை பயன்படுத்த வேண்டும். துவிச்சக்கர வண்டியையோ அல்லது கால்நடையாகவோ செல்ல முயற்சிக்கக் கூடாது. உன்னுடயை தேவையை வசதிவாய்ப்பு, காலநேரம், தேவையின் தன்மை என்பனவே தீர்மானிக்கும். எனவே நீ ஒரு வாகனத்தை ஓர் நிலையில் விமர்சிக்கவோ வெறுக்கவோ முடியாது. அவ்வாறேதான் உன்னுடயை மதமும் கடவுளை அடைய வழிகாட்டுகிறது. எப்பொழுதும் எந்த மதத்தையும் வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கடவுளையடைய வழிகாட்டுகின்றது. கடவுள் ஒன்றுதான். ஒவ்வொருவரும் புறப்படும் இடமும் பாதையுமே வேறுபடுகின்றன.
குறை கூறுதல்
நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...
-
நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...