"சோதனைக்கு போகேக்க கோவிலுக்கு போய் வாசலில் நின்று பிள்ளையாரை கும்பிட்டுவிட்டுபோடா" என அம்மா கூறினார். இது உண்மையா என ஒருதடவை என் அப்பாவிடம் கேட்டேன்.
பொதுவாக கோவிலில் மூலவர் வாசலில் இருந்து மிகநீண்ட தூரத்தில் இருப்பார். அவர் கருங்கல்லினால் ஆனா கரியநிறச் சிலையாக காணப்படுவார். அதுவும் இருட்டான கருவறையில் மங்கலான ஒற்றைத் தீபத்தில் காட்சிதருவார். அவ்வாறானதொரு நிலையில் மூலவரை நாம் வாசலில்நின்று உற்றுநோக்கி மனதார வழிபடும் பொழுது எமது ஐம்புலனும் அடங்கி மனதிற்கு கட்டுப்படும். அப்படியே பரீட்சைக்கு சென்றால் கவனம் முழுக்க வினாத்தாளில் இருக்கும். பரீட்சையை நனறாக எழுத முடியும் என்று அவர் கூறினார். மேலும் இதனால் தான் எந்தக்காரியத்தினை தொடங்கும் முன்பும் கோவிலுக்கு சென்று வருதல் வேண்டும் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment