"மாதா, பிதா, குரு, இறுதியாக தெய்வம் என்று எம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களே" ஏன் கடவுளுக்கு இறுதியிடத்தினை கொடுத்துள்ளனர் என அப்பாவிடம் கேட்டேன்.
"உண்மையில் இந்த ஒழுங்குவரிசை ஏற்றத்தாழ்வினை குறிக்கவில்லை. மாறாக ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட காலம் தாயின்தயவினால் உலகை அறிந்துகொள்கிறது. பின்னர் ஐந்து வயதுவரை தந்தையின் உதவியுடன் அறிவை வளர்கிறது. தொடர்ந்து பாடசாலைக்கு சென்று ஆசிரியர்களின் வழிகாட்டலில் உலகவிடையங்களை அறிந்து நல்லது கேட்டதினை புரிந்து கொள்கிறது. இறுதியாக தனது சொந்தக்காலில் நிற்கும்பொழுது கடவுளின் துணை அதற்கு கிடக்கிறது. இதனையே முன்னோர்கள் அவ்வாறு மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் குறிப்பிட்டுள்ளனர்" என்றார்.
No comments:
Post a Comment