ஒருதடவை என் அப்பாவிடம் கேட்டேன் நாரதர் என்னும் நகைச்சுவைப் பாத்திரம் எமது சரித்திரத்தில் காணப்படுகிறதே. அது எதற்காக உருவாக்கப்பட்டது. எமது வாழ்வியலில் அதன் பங்கு என்ன எனக் கேட்டேன்.
தற்பொழுது Brainstone என்னும் கருத்துதிர்ப்பு அல்லது மூளையின் தூண்டுதல் என்பது யோசனைகளை உருவாக்க அல்லது சிக்கல்களைத் தீர்க்க குழு விவாதம் நாடாத்தப்படுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.. இதில் உறுப்பினர்கள் தன்னிச்சையாக யோசனைகளையும் தீர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள் ஒரு சிக்கலைப் பற்றி தீவிரமாக சிந்திப்பதன் மூலம் அதைத் தீர்க்க முயற்சிக்கவும் செய்கிறார்கள். இது முதலில் 1930 இல் Alex Faickney Osborn என்பவரால் முன்வைக்கப்பட்டது. இதனை நாம் முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துகிறோம். ஆனால் இதனை எமது முன்னோர்கள் சரித்திரத்தில் நாரதர் என்னும் பாத்திரத்தினூடாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்று கூறியுள்ளனர். ஆனால் நாம் நாரதர் பாத்திரத்தினை தவறாக சித்திரித்து அதன் ஆரம்ப கருத்தான கலகத்தினை தோற்றுவித்தல் என்பதனை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அவர் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஓர் சிக்கலை முன்கூட்டியே அனுமானித்து அதற்குரிய தீர்வினையும் வெளிக்கொணரும் நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். அதனால் எமது சரித்திரத்தனை திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களாக பார்க்காமல் அத்திரைப்படங்களினூடாக வெளிவரும் கருத்துதிர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் எனக்கூறினார்.
No comments:
Post a Comment