இலகுவழி

Sunday, 12 September 2021

மாற்று அல்லது மாறு

ஒரு தடவை எனது அலுவகத்தில் பணியாற்றும் ஓர் உத்தியோகத்தரின் செயற்பாட்டினால் ஏனைய உத்தியோகத்தர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக உணர்ந்தேன். ஆனால் அவ் உத்தியோகத்தர் நெருக்கடியாக காலகட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். அவரில் நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். எனவே என்ன செய்வதென்று தெரியாது எனது அப்பாவிடம் அந்த உத்தியோகத்தரின் நற்பண்புகளையும் எடுத்துக்கூறி தற்பொழுது அவரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கூறி ஆலோசனை கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டு "உனக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் உடனே மாற்று மாறாக ஒருவருக்கும் உன்னைப் பிடிக்கவில்லையென்றால் நீ மாறு" என்கிறார். நான் குழப்பமாக அவரைப் பார்த்தேன் 

நீ ஒரு குழுவினை வழிநடத்தும் பொழுது குழுவில் ஓர் அங்கத்தவரினால் குழுவின் ஒட்டுமொத்த குறிக்கோள் பாதிக்கப்படுகிறது என்றும் அவருடைய செயற்பாடுகள் தவறானவை என நீ  கருதும் பட்சத்தில் உடனடியாக அதனை அவருக்கு தெரியப்படுத்தி அவரின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அவர் விரும்பாது அல்லது ஒத்துழைக்காது விட்டால் கௌரவமாக அவரை இடம்மாற்ற வேண்டும். மாறாக ஒட்டுமொத்த குழுவும் உனது தலைமைத்துவத்தை விரும்பாது விட்டால் உடனடியாக உனது தலைமைத்துவப் பாங்கினை மாற்ற வேண்டும். அதன்பின்னரும் அவர்கள் உன்னை விரும்பாது விட்டால் நீ தலைமைப் பொறுப்பிலிருந்து மாறவேண்டும். நேரம் பொன்னானது என்பதனால் ஆழமாக சிந்த்தித்து விரைவாக உனது முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

குறை கூறுதல்

நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...