இலகுவழி

Sunday, 12 September 2021

அரச சேவையில் தவிர்க்கவேண்டிய 3C கள்

நான் அரச சேவையில் இணைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு தடவை கேள்வி நடைமுறைப் போட்டியில் (Procurement) வெற்றிபெற்ற ஒரு வழங்குனரால் ஓர் Laptop வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த Laptop இனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு எதாவது குழப்பம் ஏற்பட்டால் எனது அப்பாவிடம் விளக்கம் கேட்பேன்.  அன்றும் அவ்வாறு எனது அப்பாவிடம் குறித்த வழங்குனர் எனக்கு வழங்கவுள்ள Laptop இனை பற்றி எடுத்துரைத்து நான் எந்தவித பக்கச்சார்பாகவும் நடக்கவில்லை. அதேநேரம் எனது நடவடிக்கையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நியாயமான முறையில் அவர் வெற்றி பெற்றார். மேலும் வழங்குனர் விரும்பியே அதனை எனக்கு Complement ஆக வழங்குகின்றார். எனவே அதனை நான் வாங்குவதில் எந்தத் தவறுமில்லை என நினைக்கிறேன். அதனை வாங்கவா? என வினாவினேன்.

அதற்கு அவர் தாபன விதிக்கோவைக்கு அமைய ஓர் அரச உத்த்தியோகதர் எந்தவிதாமான அன்பளிப்புக்களையும் பெறக்கூடாது என்று கூறினார்.  மேலும் இன்று நீ வாங்கும் Complement ஆனது நாளை உன்னை Commission வாங்கத்தூண்டும். இதுவே பின்னாளில் Corruption ஆக மாறும். ஓர் அரச உத்தியோகத்தருக்கு இந்த மூன்று C க்களும் இருக்கக்கூடாது என்றார். உனது கௌரவம், உனது கல்வி, எனது மரியாதை, எங்களது குடும்பம் போன்றவற்றை சிறிது காலம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய  ஓர் Laptop பிற்கு அடைவுவைக்க விரும்புகிறாயா? என்று கேட்டார்.  உனது மேலதிகாரி உன்னை அழைக்கும்பொழுது துணிவாக சென்று அவர்முன் நின்று உரையாட வேண்டும். இதுவே சிறந்த சொத்து. நேர்மையான ஒரு அதிகாரிக்கு மற்றவர் கொடுக்கும் மரியாதையை நீ அவ்வாறு இருந்து பார்க்கும் பொழுது மட்டுமே தெரியும். வழங்குனர் ஒருவர், ஓர் அதிகாரியின் அறைக்கதவை திறப்பதிலிருந்து முன்னால் உட்காரும் வரை உற்றுநோக்கினால் இருவருக்குமிடையில் உள்ள உறவினை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். நீயொரு நேர்மையான, மற்றவர்கள் மதிக்கின்ற அதிகாரியாக இருந்தால் மட்டும் போதும் என்றார்.

No comments:

Post a Comment

குறை கூறுதல்

நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...