இதனை பலர் சாப்பாட்டிற்கு முன்னிற்க வேண்டும் என்றும் சண்டையென்றால் தூர விலகியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அனால் உண்மையில் ஓர் சபை நடுவே சாப்பாட்டிற்கு முதலில் அழைக்கப்படுபர் அந்த சபையில் உள்ள பெரியவர் ஆவார். அவ்வாறான நிலையில் இருத்தல் வேண்டும். அதேபோன்று படை நடைவடிக்கைகளில் பின்னாடி நின்று அதனை வழிநடத்துப்பார் தளபதி ஆவார். அவரே அங்கு பெரியவர். அவ்வாறான ஓர் நிலையை நீ அடையவேண்டும். அதாவது ஒருவரின் மனம்குளிரும் செயல் என்றாலும் மனம்வருந்தும் செயல் என்றாலும் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நிலையில் இருத்தல் வேண்டும். ஏனெனில் மனம்வருந்தும் செயலில் ஓர் நல்லவர் தலைமைப்பொறுப்பில் இருந்தால் அச்செயல் பேரழிவை ஏற்படுத்தாது.
No comments:
Post a Comment